சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக கெஞ்சுவது அதிமுக என துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சு.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தேமுதிக பாமகவுக்கு இணையாக சீட், எம்பி சீட், தேர்தல் செலவுக்கு ஒரு பெரிய தொகை கேட்டு பிடிவாதம் பிடிப்பதாலும் அதிமுகவிற்கு இது சரிவராது என்பதாலும் நேற்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும், இனி தேமுதிகவிடம் அதிமுக வளிய சென்று பேசாது எனவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக கெஞ்சுவது அதிமுகதானே தவிர தேமுதிக அல்ல என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் சுதீஷின் இந்தப் பேச்சு புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.