யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் யூடியூப் சேனல்களில் பைக் ரைடிங், பைக் சாகசம் போன்றவற்றை ஒளிபரப்பி வருபவர் டிடிஎஃப். வாசன். இவருக்கு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதுரை ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார். இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துவந்தது.
இதையடுத்து, TTF வாசன் மீது ஏற்கனவே போத்தனூர் போலீஸார் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது சூலூர் போலீஸார் 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.