Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு எம்பால்மிங் செய்த மருத்துவருக்கு சம்மன் - ஆறுமுகச்சாமி அதிரடி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (11:59 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எம்பால்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
 
ஜெ.வின் சிகிச்சை குறித்த வீடியோ வெளியானதால் கிருஷ்ணபிரியாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.அதேபோல், தினகரன், சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், ஜெ.வின் சிகிச்சை தொடர்பான 4 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை தினகரனின் வழக்கறிஞர் நேற்று ஆறுமுகச்சாமியிடம் வழங்கினார்.
 
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்த பின் ஜெ.வின் உடலை எம்பால்மிங் செய்த, சென்னை மருத்துவ கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குனர் சுதா சேஷய்யனுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று அவர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.
 
ஜெ.வின் சிகிச்சை வீடியோக்கள் கிடைத்துள்ளதை அடுத்து ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments