Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - பேரறிவாளன் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:11 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகவே இனியும் கால தாமதம் செய்யாமல் தமிழக அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக எனது மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என  கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments