ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் , சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்ட நிலையில் புனேவில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது..
இந்த நிலையில், தமிழகத்தில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பேர் குரங்கம்மை தொற்று அறிகுறி சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள், இது சாதாரண அம்மைத் தொற்று எனத் தெரிவித்துள்ளனர்.