Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

Mahendran
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (17:49 IST)
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
 
பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள வழி தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கடற்கரையிலிருந்து சில வழிதடங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை கடற்கரை - தாம்பரம் இடையே செல்லும் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு ரயில் விபத்து: எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு.. தமிழக பகுதியில் கரை கடக்குமா?

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு..!

காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments