தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024 – 25 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் அமைச்சரின் மண்ணுயிர் காப்போம் என்ற புதிய திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆடு, கோழி, மாடு, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்காக வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கிடு
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ₹1 கோடி ஒதுக்கீடு
12.500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்
பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு