தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் செய்ய இருப்பதாகவும் அங்கு அவர் தொழில் அதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அவர் அமெரிக்கா செல்லும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்க பயணம் செய்கிறார் என்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சரின் இந்த அரசு முறை பயணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தின் போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டவரை சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அவர் கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது..
அதைப்போல் மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரிகளையும் தமிழக முதல்வர் சந்திக்கிறார் என்றும் அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் அதிபர்களையும் சந்திக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வெற்றியுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது