Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கைநாட்டு ஆட்சி நடத்தும் கேவலமான தமிழகம்’: சீறும் முன்னாள் காங். தலைவர்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (17:03 IST)
ஆட்சியே இல்லாமல் கைநாட்டு போட்டு ஆட்சி நடத்துகின்ற கேவலமான சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


 

புதுடெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், “விரோதியாக இருந்தாலும் துக்க காரியத்தை விசாரிக்க செல்லும்போது யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை காவல்துறை தடுத்துள்ளது. இது நாடா அல்லது காடா.
 
மோடியிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும். ஒரு வருடத்தில் 365 நாட்களில் 360 நாட்கள் வெளிநாடு செல்ல வேண்டியது. போர் அடித்தால் இந்தியாவுக்கு 5 நாட்கள் வருவார்.
 
மேலே அப்படிப்பட்ட ஆட்சி என்றால், கிழே இருக்கிற ஆட்சி... காமராஜருடைய ஆட்சி, ராஜாஜியின் ஆட்சி, அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி. எம்ஜிஆரின் ஆட்சி என்று சொன்னதுபோய் இன்றைக்கு கைநாட்டு அரசாங்கமாக இருந்து வருகிறது.
 
ஆட்சியே இல்லாமல் கைநாட்டு போட்டு ஆட்சி நடத்துகின்ற கேவலமான சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் இங்கு பறிக்கப்பட்டுள்ளன. யாரும் எதிர்த்துப் பேசக்கூடாது. இதையெல்லாம் இங்கு மாற்ற வேண்டும். மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments