ஷவர்மா உள்பட ஒரு சில உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மையோனைஸ்க்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு உணவு பொருளாக மையோனைஸ் உள்ளது. இதை தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதால் கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒரு ஆண்டு தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மையோனைஸ் என்பது முறையற்ற தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை காரணமாக சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை மூலம் பச்சை முட்டைகளால் தயாராகும் மையோனைஸ் இனி தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடாது என்றும், அதை மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.