Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? - க்ளாஸ் எடுத்த தமிழருவி மணியன்!!

Advertiesment
ரஜினி
, திங்கள், 9 மார்ச் 2020 (13:04 IST)
ரஜினி குறித்து பேச மாட்டேன் என கூறிய தமிழருவி மணியன், ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? என க்ளாஸ் எடுத்துள்ளார். 
 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.    
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். 
ரஜினி
இந்நிலையில் ரஜினி குறித்து பேச மாட்டேன் என கூறிய தமிழருவி மணியன், ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? என க்ளாஸ் எடுத்துள்ளார். தமிழருவி மணியன் பேசியதாவது, 
 
ரஜினி சமீபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 விஷயங்களை பேசினார். ஒன்று, ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும், இரண்டு, 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.
ரஜினி
இது இரண்டையும் ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் ரஜினியின் மூன்றாவது கோரிக்கையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆம், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என ரஜினி கூறியதை மாவட்ட செய்லாளர்கள் ஏற்கவில்லை. 
 
அரசியலை தூய்மைப்படுத்தவே ரஜினி அரசியலுக்கு வருகிறார். ரஜினியின் ஏமாற்றம் என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் மக்களை சென்று சந்திக்கவில்லை என்பதுதான் என பேசினார் தமிழருவி மணியன். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிலையத்தில் சோதனையே நடக்கவில்லை! – அலட்சியம் காட்டுகிறதா அரசு?