விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டிப்பதாக கூறி டிவிட்டரில் கருத்த பதிவிட்ட பாஜக தலைவர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜாவை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
பொன்பரப்பி கிராமத்தில் பானை சின்னத்தை வரைந்த காரணத்தினால் தலித் மக்கள் தாக்கப்பட்டு அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. இதனையடுத்து நடந்த அரசியல் விமர்சங்களுக்கு பின்னர் இருதியாக திருமாவளவன் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்காக அரசியலை விட்டு விலகவும் தயார் என தெரிவித்தார்.
மறுபக்கம், திமுகதான் எல்லாவற்றையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக தரப்பு தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தலைவர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா டிவிட்டரில் தங்களது கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடி என வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் விசிக திருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என தமிழிசை பதிவிட்டுள்ளார்.
சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆவார் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட இணையவாசிகள் கடுப்பாகி தமிழிசை மற்றும் எச்.ராஜாவின் பதிவுகளை எதிர்த்து விமர்சித்து வருகின்றனர்.