Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்சென்னையை ஒதுக்கியது தமிழிசைக்கு அதிருப்தியா? திமுக கோட்டையில் வெற்றி கிடைக்குமா?

Siva
வியாழன், 21 மார்ச் 2024 (19:45 IST)
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிய  நிலையில் அதில் சமீபத்தில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு தென்சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தென்சென்னை தொகுதியை ஒதுக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தென் சென்னை தொகுதியில்  கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களத்தில் இறங்கி உள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சௌந்தர்ராஜன் திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி தொகுதியை தான் கேட்டதாகவும் ஆனால் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட இருப்பதால் வேறு வழி என்று அவருக்கு தென் சென்னை ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரும் தென்சென்னையை போட்டியிட நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மும்முனை போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments