அத்திவரதரைப் பார்க்க திமுக காரர்கள் எல்லாரும் வருவதைப் போல திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேண்டும் என பாஜக தமிழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோற்றமளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்காக ஒரு மாத காலமாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளார். அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதில் திமுக பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் விவிஐபி பாஸ்களில் வந்து வழிபடுவது விமர்சனங்களை எழிப்பியுள்ளது.
பகுத்தறிவிற்குப் பெயர்போன திமுக தலைவர் கலைஞரின் குடும்பத்தில் இருந்தே அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் அத்திவரதரை வழிபட்டுள்ளனர். இது குறித்து நேற்று அத்திவரதரை தரிசித்த தமிழிசை சவுந்தர்ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது ‘முன்பெல்லாம் திமுகவினர் ஒளிவுமறைவாக வருவார்கள். இப்போது வெளிப்படையாக வருகிறார்கள். அங்கே ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது, ஸ்டாலின் உள்பட. அவருக்கு எல்லா நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் அவருடைய மனைவியின் மூலம் அனைத்து அவற்றைப் பூர்த்தி செய்து கொள்கிறார். இதை நான் வரவேற்கிறேன். கொள்கை மாறுபாடு இருந்தாலும் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும். அப்படி வருகை தந்தால் அவரை நான் வரவேற்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.