Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - பொங்கியெழுந்த தமிழிசை

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - பொங்கியெழுந்த தமிழிசை
, சனி, 20 ஜனவரி 2018 (14:08 IST)
தமிழக அரசு பேருந்து விலையை குறைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அதேபோல், வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமும் இருமடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தராஜன் “மக்களுக்கு பணச்சுமை மற்றும் பயணச்சுமையை ஏற்படுத்தும் இந்த அதிகமான பேருந்து கட்டண உயர்வு உடனே குறைக்கப்பட வேண்டும். மக்கள் விரோத நடவடிக்கை தொடருமானால் தமிழக பாஜக சார்பில் மாநிலங்கள் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்நியன் பட பாணியில் நடந்த உண்மை நிகழ்ச்சி; பரிதாபமாக உயிரிழந்த 2 இளைஞர்கள்