Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது: சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (06:38 IST)
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது.உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும் சமூக சம்பிரதாயங்களை புரிந்து கொள்ளும் நிலையில் நீதிமன்றங்கள் இல்லை ....துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களின் கருத்து.சரியான கருத்து

முன்னதாக இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குருமூர்த்தி கூறியதாவது:  சமூக ஆர்வலர் போன்ற பெண்கள்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். இவ்வாறு நடந்து கொள்வது, நிஜமான பக்தர்களை அவமானப்படுத்தும் போக்கு. சமூகத்தையும், சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்ளும் நீதிமன்றங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments