Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை இவ்வளவா? தமிழக அரசு சார்பில் பதில்!

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (07:44 IST)
தமிழகத்தால் வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களின் விலை 600 ரூபாய் என ஐ ஏ எஸ் அதிகாரி உமாநாத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை பணிகளை மேற்கொள்ள ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளன. 1.25 லட்சம் ரேபிட் கருவிகள் தமிழக அரசு கேட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 14 ஆயிரம் கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றை கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசின் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் குறை இருப்பதாக கூறி வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “கொரோனா பரிசோதனைக்கு வாங்கப்பட்ட கருவிகள் எத்தனை? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டன? என்பது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல தமிழகமும் எவ்வளவு கருவிகள்? என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் உமாநாத் பேசினார். அப்போது ரேபிட் டெஸ்ட்களின் விலை என்ன எனக் கேட்டபோது ‘மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய் என்ற விலையின் அடிப்படையில்தான் ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கினோம்’ எனத் தெரிவித்துள்ளார். சதீஸ்கர் மாநிலத்தில் ஒரு ரேபிட் டெஸ் கிட்டை 370 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அதிக விலைக்கு வாங்கியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments