Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரெட் அலர்ட் – அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை

ரெட் அலர்ட் – அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை
, வியாழன், 4 அக்டோபர் 2018 (16:26 IST)
அக்டோபர் 7-ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மாவட்ட உயரதிகாரிகளோடு ஆலோசனை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மிக அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அக்டோபர் 7-ந்தேதி அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடையத் தொடங்கி உள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அதைப் போன்ற நிலைமை மறுபடியும் வரக்கூடாது என்று அரசு இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தபோது இது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில் ‘மழை வந்தால் வெள்ளம் வரத்தான் செய்யும். சமீபத்தில் கேரளாவில் வெள்ளமும் இந்தோனேஷியாவில் சுனாமியும் வந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இயற்கை சீற்றங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதனால் வெள்ளம் வரும்பட்சத்தில் அதை சரியாகக் கையாள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனக்கூறினார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட உயரதிகளை சந்த்திக்க ஏற்பாடு செய்யக் கூறியுள்ளார். இதனால் 32 மாவட்டங்களையும் சேர்ந்த அதிகாரிகள் நாளை முதலவரை சந்திக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை வந்தா வெள்ளம் வரத்தான் செய்யும்: அசால்ட் முதல்வர்