தமிழக சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் கடன் தள்ளுபடிகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரனுக்கு உள்ளிட்ட நகைகள் மீது வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.