காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியனும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் இன்று திடிரென்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான சுப்ரமணி என்ற வீரரும் ஒருவராவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் கடந்த 10 ஆம் தேதிதான் பணிக்குத் திரும்பியுள்ளார்.
சுப்ரமணி கடந்த 5 ஆண்டுகளாக சிஆர்பிஎஃப் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். சுப்ரமணிக்கு கிருஷ்ணவேணி என்ற திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சுப்ரமணியின் இறப்பால் தூத்துக்குடி மாவட்டம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.