தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள “பெல்லோஷிப்” குறுகிய கால பணி பயிற்சிக்கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு கல்வித்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பட்டதாரி இளைஞர்களின் ஆற்றலைப்பயன்படுத்தி இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்காக “தமிழ்நாடு கல்வி பெலோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதுகலை உறுப்பினர், உறுப்பினர் என்ற இரண்டு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது முதுநிலை உறுப்பினர் பதவிக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பதவிக்கு 114 பணியிடங்களும் உள்ளன. முதுநிலை உறுப்பினர் பதவிக்கு ரூ.45,000 மாத சம்பளமும், உறுப்பினர் பதவிக்கு ரூ.32,000 மாத சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான நிலையில் கடைசி தேதி ஜூலை 15 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2 ஆண்டுகால குறுகிய பணிக்காலம் கொண்ட இந்த திட்டம் நிறைவடைந்ததும் அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த மேலதிக விவரங்களை tnschools.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.