தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய உத்தரவை அளித்துள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் ஐந்தாம் கட்டம் ஊரடங்காக ஜூன் இறுதிவரை ஊரடங்கும் 5.0 அமலுக்கு வருகிறது. அதேசமயம் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பல நாட்களாக அனைத்து தொழில்களும், கடைகளும் முடங்கியுள்ள நிலையில் சென்னையிலும் தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 30 வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.
அறிவிப்பு வெளியாகும் வரை தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கும்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பேருந்து போக்குவரத்து தடை தொடரும்
ஆட்டோக்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம் என்ற நிலையில் தற்போது இருவர் பயணிக்க அனுமதி
சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி
திரையரங்குகல், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கான தடை தொடரும்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர ஏனைய மாவட்டங்களில் 50 சதவீதம் பேருந்துகள் இயங்க அனுமதி.
சில பகுதிகளில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி
ஜூன் இறுதி வரை கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்கள் இ-பாஸ் வைத்திருப்பது அவசியம்
அறிவிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் பயணம் செய்யு இ-பாஸ் தேவையில்லை
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருக்கு மிகாமல் அலுவலகத்தில் வந்து வேலை பார்க்க அனுமதி
50% ஊழியர்களோடு அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்பட அனுமதி
இவ்வாறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பேருந்து வசதியை தவிர மற்ற தளர்வுகள் சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.