தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விளக்கம் அறிக்கை தயார் செய்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். இதில் போராட்டம் எப்படி கலவரம் ஆனது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.