நவம்பர் 4 அன்று தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர வரைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாசுபாட்டை குறைக்க ஆண்டுதோறும் பட்டாசு வெடிபதற்கான அனுமதி நேரத்தை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும், பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.