தமிழகத்தில் ஏற்கனவே சில வகை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடை உள்ள நிலையில் மேலும் சில பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கால் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க கடந்த சில ஆண்டுகளாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது தமிழக அரசு 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த தடை செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும் என்றும், தடையை மீறி இந்த பிளாஸ்டிக் பைகளை விற்றாலோ, உபயோகித்தாலோ கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.