அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை அடுத்து இன்று 58 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இதை நிறைவேற்றும் விதமாக 58 பேருக்கு பணி நியமன உத்தரவை தமிழக அரசு கொடுத்துள்ளது. இது சம்மந்தமாக நடந்த இன்று சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.