தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் தற்போது அது முடிந்து குளிர்கால சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆரம்பமே குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அவிலாஞ்சியில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அடர் பனிமூட்டம், குளிர் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.