Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்! – அலுவலகங்களுக்கு உத்தரவு!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (13:06 IST)
தமிழ்நாடு முழுவதும் கொரோனா காரணமாக முகக்கவசம் அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகங்களில் கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments