Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை செயலாளர் வீட்டிலும் கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட ராதாகிருஷ்ணன்!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (08:36 IST)
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வீட்டிலும் பரவியுள்ளது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக சென்னை, மதுரை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வரும் முக்கிய அதிகாரியான தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவரது மாமனார், மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து குடும்பத்துடன் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவரது மனைவிக்கும், மகனுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை ட்விட்டர் மூலம் பதிலளித்தபோது தெரிவித்த ராதாகிருஷ்ணன் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments