வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெறுவதால் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதால் மார்ச் 4ம் தேதி தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிங்கங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றில் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.