Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர்கள் அமோக ஆதரவு; 3வது வாரத்தில் பள்ளி திறக்க வாய்ப்பு?

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (14:39 IST)
கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதால் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பருவ தேர்வுகள் நெருங்கி வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் கல்வி அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முதல்வர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரையிலான கருத்து கேட்பு கூட்டங்களில் பெற்றோர்கள் பெரும்பான்மையாக பள்ளிகளை திறக்க ஆதரவாக பேசியுள்ளதாகவும், அதனால் இந்த மாதத்தின் 3வது வாரத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments