இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி முதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள நிலையில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வார இறுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் முதல், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதிற்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்து 6 மாதங்களை கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்த முகாம்களில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.