Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (15:02 IST)
அக்டோபர் 7-ந்தேதி அன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் இன்று பகலில் விட்டுவிட்டு மழைப் பெய்யும். இன்று இரவும் நாளையும் தமிழகம் முழுவதும் நல்ல மழைப் பெய்யும்.மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுழற்சி வடதமிழகம் நோக்கி நகரும்.

மழைபெய்யும் மாவட்டங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது.. தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். மேற்குத் தமிழக மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று மாலை முதல் நல்ல மழை பெய்யும். மதுரை மற்றும் ராமநாதபுரத்திலும் நல்ல மழை பெய்யும்.

ஒட்டு மொத்தமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments