வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நள்ளிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பற்றி தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தற்போது மழை இன்று மாலை வரை நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.
அவரது சமீபத்தைய முகநூல் பதிவில் “முழு KTCC பகிதிகளிலும்(காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் சென்னை) கனமழை பெய்துள்ளது. புயலின் பாதை இந்த பகுதிகளில் மெதுவாக நகர்வதால் கடந்த 12 மணிநேரங்களாக பெருமழை பெய்து வருகிறது. மழை இன்று மாலை வரை தொடரும். அதனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மின்சாரம் விரைவில் வரும் என எதிர்பார்க்க முடியாது. வெளியில் செல்வதை தவிருங்கள்” எனக் கூறியுள்ளார்.