இங்கையிலுள்ள மலையக தமிழர், சிங்கலர், முஸ்லிம்கள், ஆகிய அனைவருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட போதிலும், கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் அந்த நாடு மீளவில்லை.
இதனால், எதிர்க்கட்சியினர் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நீண்ட ஆண்டுகளளாக இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத்தி வசித்து வரும் தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இப்பொருட்களைப் பெற்றுக்கொண்ட அதிபர் விக்ரமசிங்கே, இலங்கைச் சமூகத்துடன் மலையக தமிழர்களும் இணைந்துள்ளனர். இன்னும் இணையாமல் உள்ள பலர் மீது இணைய வழிசெய்யப்படும் என்றும் ,மலையகத் தமிழர்களின் குழந்தைகள், படித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சூழலில் அங்குள்ள பொருளாதாரம் சிக்கலின்றி இருக்கவும், அங்குள்ள சிங்கலர், முஸ்லிம்கள், ஆகிய அனைவருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.