தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தமிழிசை சௌந்தரராஜன் வாபஸ் பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் கனிமொழி அமோக வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு தொடுத்தார்.
இதனையடுத்து சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கனிமொழி வெற்றி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் வழக்கை தொடர விருப்பமில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.