டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கணினிமயமாக்க தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது. மேலும் 4,810 டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது.
டாஸ்மாக் முழுவதும் கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.