Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதியில் விடிய விடிய மது விற்பனையா?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:40 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் விடிய விடிய மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள வாக்காளர்களுக்கு தினமும் மது பாட்டில்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் இதற்காக மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்துக்கொண்டு விடிய விடிய மது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலை ஒட்டிய அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை கொடுப்பது மட்டுமின்றி பரிசு பொருட்களையும் வழங்கி வருகிறார்கள் என்றும் மதுபாட்டில்கள் அதிகமாக விற்பனையாவதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலையில் எப்போது கேட்டாலும் விற்பனை செய்ய ஊழியர்கள் தயாராக இருப்பதாகவும் பிளாக்கில் கடையை திறந்து ஊழியர்கள் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு பாட்டிலுக்கு குறைந்தது 100 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments