வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த ஓட்டுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
எனவே அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சிறப்பாகத் தேர்தலை நடத்தை தேர்தல் ஆணையம் பறக்கும் படையை அமைத்து 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.
எனவே வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தமிழக மதுவிலக்கு ஆணையம் ஏற்கனவே உத்தரவுபிறப்பித்துள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வரும் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை என அறிவித்துள்ளது.