தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சமஸ்கிருத பெயர்கள் மட்டும் இருந்துவரும் நிலையில் அவை தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மாற்றம் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்தில் சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள் உள்ளன என்றும் இது குறித்து தீவிர ஆய்வு செய்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே தமிழில் அர்ச்சனை என்ற நடைமுறையை அமல்படுத்திய திமுக அரசு தற்போது கோவில்களின் பெயர்களையும் தமிழில் மாற்ற உள்ளது அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது