கரூரில் சீமான் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பு திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெண்ணாமலை கோவில் நிலப் பிரச்சனை தொடர்பாக மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் சென்றிருக்கும் நிலையில், அவர் ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். இந்த நிலையில், ஹோட்டல் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பாலசுப்பிரமணியன் கோவிலை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கு உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு சீமான் கரூர் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் திடீரென போலீசார் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலை சுற்றி இருப்பதாக கூறப்படும் நிலையில், சீமான் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.