தாமிரபரணி ஆற்று நீர் குடிக்க உகந்ததல்ல என தனியார் ஊடகம் ஒன்று எடுத்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
சர்வதேச தரக்குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஆற்று நீர் பல மடங்கு மாசடைந்து உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தாமிரபரணி நீரில் நன்மை கிடைக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது என்றும் அந்நீரின் கால்சியமும் அதிக அளவில் காணப்படுகிறது என்றும் நீரின் மாதிரியை எடுத்து சோதனை செய்த தனியார் ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது
தாமிரபரணி ஆற்று நீரை நம்பி சுற்றுப்புறத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் நிலையில் இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தாமிரபரணி ஆற்று நீரை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.