திமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டது
இந்த நிலையில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்செல்வன் ஓபிஎஸ் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
ஒபிஎஸ் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை என்றும் முதல்வர் வேட்பாளர் பதவியை தான் விட்டுக் கொடுத்துள்ளார் என்றும் அவர் பயங்கரமான புத்திசாலி என்றும் தேர்தலுக்குப் பின்னர் அவர் என்ன செய்வார் என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்
மேலும் வரும் தேர்தலில் எப்படியும் திமுக கூட்டணி தான் ஜெயிக்கும் என்றும் முதல்வர் நாற்காலியில் முக ஸ்டாலின் தான் உட்கார போகிறார் என்பதை ஓபிஎஸ் ஏற்கனவே அறிந்து இருக்கிறார் என்றும் அதனால்தான் முதல்வர் வேட்பாளர் நானில்லை, எடப்பாடி பழனிச்சாமி தான் என புத்திசாலித்தனமாக கைகாட்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவதில் வல்லவர்கள் என்றும் அதில் இரண்டு பேருமே தெளிவாக இருக்கின்றார்கள் என்றும் தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது