Publish Date: Fri, 20 Feb 2026 (14:17 IST)
Updated Date: Fri, 20 Feb 2026 (14:19 IST)
தமிழகத்தில் ஒரு கோடியே முப்பது லட்சம் பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் திமுக அரசு அந்த தொகையை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு திடீரென மகளிர் உரிமை தொகையை பெறும் பெண்களின் வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆனது.. இதைப்பார்த்து பெண்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
அது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேர்தல் நெருங்கும் நிலையில் மகளிர் உரிமைத் தொகையை தடுக்க டெல்லியை சேர்ந்தவர்களும், தமிழகத்திலிருந்து அதற்கு உதவி செய்பவர்ர்களும் சிலர் முயற்சி செய்கிறார்கள். எனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மூன்று மாதத்திற்கு சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்பு தொகை 2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது என சொல்லியிருந்தார்..
எங்களின் இன்று சட்டசபையில் பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் உரிமை தொகையை யாரேனும் நிறுத்த முயற்சி செய்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என பேசி அதிர வைத்தார்.