பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு பத்து தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது என்பதை பார்த்தோம்
குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதே கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கேஸ் அழகிரி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடும் தங்கர் பச்சான் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கடலூர் தொகுதியை பொருத்தவரை வன்னியர் சமூகம் அதிகம் உள்ள தொகுதி என்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு நிச்சயம் அதிக அளவு ஓட்டு கிடைக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் கே எஸ் அழகிரி அந்த தொகுதியில் மிகவும் பிரபலமானவர் என்பதும் கூட்டணி பலமும் அவருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.