Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினர் பாஜக கூட்டணியில்தான் இருக்கோம்! விலகியது எடப்பாடிதான்! - ஓபிஎஸ் பேட்டி

J.Durai
வியாழன், 8 பிப்ரவரி 2024 (11:09 IST)
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.


 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் கூறுகையில்:

அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.

இந்திய கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு:

அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு.

உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்.

எல்.முருகன் மத்திய அமைச்சராக தகுதி இல்லை என டி.ஆர்.பாலு கூறியது குறித்த கேள்விக்கு:

அந்த செய்தியை நான் முழுமையாக பார்க்கவில்லை பார்த்த பிறகு கூறுகிறேன்.

உங்களிடம் வராமல் எடப்பாடி இடம் செல்கிறது குறித்த கேள்விக்கு:

இப்பவே சண்டையை ஆரம்பித்து வைக்கிறீர்கள்.

உங்கள் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு:

உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்.

அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா எடப்பாடி அணியையா என்ற கேள்விக்கு:

நாங்கள் தொடர்ந்து எண்டிஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம் விலகி இருப்பது பழனிச்சாமி அவர்கள் தான்.

எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு:

உறுதியாக உங்களிடம் சொல்வேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments