சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 58 பேருக்குக் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஈரோட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 :00 மணிவரை பேக்கரிகளை திறக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.