Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 18 May 2025
webdunia

முதல்வர் மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்று சொல்லக்கூடாது -சீமான்

Advertiesment
அரசியல்
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:07 IST)
முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்றும் பாடுபடுகிறேன் என்று சொல்லக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 

கடந்தாண்டு  தமிழகத்தில் நடந்த சட்டசபையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று முதல்வர் பேசும்போது, "நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. இதில் அவதூறுகள், பொய் பரப்புரைகளை பற்றி கவலைப்படுவதற்கு எனக்கு அவசியமில்லை, நேரமுமில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கு நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  முதல்வர் ஸ்டாலின் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் என்று கூறுகிறார். அதை மக்கள்தான் சொல்ல வேண்டும், அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் என்றும் பாடுபடுகிறேன் என்று சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவை 100 இடங்களில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி