ஏப்ரல் 19ம் தேதி வர 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தலைமை செயலர் கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கஜா புயலை சுட்டிக்காட்டி ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதேபோல் திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கு தேர்தலை வரும் ஏப்ரல் வரை தேர்தல் ஆணையம் நடத்தப்போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என கடிதம் எழுதியிருப்பதாக கூறியுள்ளது. அந்த கடிதத்தில் தலைமை செயலர், கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 6 லட்சம் வீடுகள். 1.5 லட்சம் மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மின்மாற்றிகள் மற்றும மின் நிலையங்கள் பழுதாகியுள்ளது, அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவு பெற குறைந்த பட்சம் 3 மாதங்கள் ஆகும். எனவே திருவாரூர் தொகுதியில் தேர்தலை ஏப்ரல் வரை நடத்த வேண்டாம். இதேபோல் 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என கூறியுள்ளார். இந்த கடிதம் கடந்த டிசம்பர் 28ம் தேதி உள்துறை அமைச்சகத்துக்கு தலைமை செயலர் அனுப்பியுள்ளார்.