Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
, சனி, 26 ஜூன் 2021 (21:42 IST)
வரும் 15 ம் தேதிக்கு பின்பு நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ? கரூர் கே.சி.பி ஆதரவாளர்கள் திடீர் ஆர்வம்.
 
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி, இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும், பல்வேறு அடைமொழி வைத்து அழைத்து அதன் மூலம், எம்.பி மற்றும் அரவக்குறிச்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தவரும் ஆவார். கோயில் காரியங்கள் மற்றும் சமூக வேலைகளை மிகுந்த ஆர்வம் காட்டி செய்து வந்தவர் திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரும், அப்போதைய கரூர் எம்.பி மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வும் ஆனவர், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்று கூறி மாற்று கட்சியில் எங்கும் இணையாமல், தற்போது வரை திமுக விற்கு மட்டுமே தன்னை உண்மை விசுவாசியாக இருந்து தனது சொத்துக்கள் அனைத்தும் ஏலம் போனது தான் மிச்சம், இந்நிலையில், கரூர் மாவட்ட அளவில் சரி நடந்து முடிந்த எம்.எல்.ஏ தேர்தலில் சீட் கொடுக்கவில்லை, கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கூட சீட் கொடுக்கவில்லை, இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
 
தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே சென்றமுறை ஆளுகின்ற அதிமுக அரசு அங்கம் வகித்த நிலையிலும், அமைச்சர் பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டிக்கு தீர்ப்பு வழங்கி, எம்.எல்.ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவியையும் நீதிமன்றம் தனது நீதியை நிலை நாட்டியது.
 
இந்நிலையில், இந்த விசாரணை தீர்ப்பு வந்து செந்தில்பாலாஜி குற்றவாளி என்று நிரூபணம் ஆகி விட்டால், செந்தில்பாலாஜி தன்னுடைய எம்.எல்.ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவியை இழந்து விடுவார், பின்னர் வரும் இடைத்தேர்தலில் கட்சியின் தீவிர விசுவாசியும், தற்போது வாடகை வீட்டில் தங்கி வருவதாக கூறப்படும் கே.சி.பி என்கின்ற கே.சி.பழனிச்சாமிக்கு திமுக தரப்பு சீட் கொடுக்க வேண்டுமென்கின்றனர் திமுக வினர். மேலும், சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த கரூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வீரமங்கை வாசுகி முருகேஷன், விபத்தினால் உயிரிழந்த பின்பு அவரது வீட்டிற்கு வந்த தற்போதை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தங்களது குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினார். பின்னர் அந்த குடும்பத்தினை கரூர் மாவட்ட திமுக வினர் யாரும் மறக்காத நிலையில், கரூர் மாவட்ட புதிய பொறுப்பாளரும், தற்போதைய அமைச்சருமான செந்தில்பாலாஜி கே.சி.பழனிச்சாமியையும் மறந்து விட்டார். வாசுகி முருகேஷன் குடும்பத்தாரையும் மறந்து விட்டார். ஆகவே ஒன்று கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு சீட் கொடுக்க வேண்டும், இல்லை என்றால், வாசுகி முருகேசன் குடும்பத்தினருக்கு யாருக்காவது, அதாவது அவரது கணவர் முருகேஷன் அல்லது தம்பி ரவிக்குமார். அல்லது அவரது மகளுக்கோ கொடுக்க வேண்டுமென்று தற்போதே கரூர் மாவட்ட திமுக வினர் புதிய உற்சாகத்தில் கரூர் தொகுதிக்கான வேலையை பார்த்து வருகின்றனர் என்கின்றனர் பழைய திமுக உண்மை விசுவாசிகள். 
 
எனவே தீர்ப்பு எப்படி வருகின்றதோ ? ஒரு வேலை செந்தில்பாலாஜியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால்., அடுத்த திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியா ? வாசுகி முருகேஷன் குடும்பத்தினரா ? என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்ளது என்கின்றனர் திமுக வினர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரொனா பாதிப்பு !